Wednesday, 26 January 2011

மூன்று கட்டங்களைக் கொண்ட புத்தளம் நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் முதற்கட்ட பணிகள் பூர்த்தியடைந்திருக்கும்
நிலையில் இம்மாத இறுதிக்குள் மின் உற்பத்தியை ஆரம்பிக்க எதிர்பார்த்திருப்பதாக அனல் மின் நிலையத் திட்டத்தின் சிரேஷ்ட திட்டப் பணிப்பாளர் டபிள்யூ. டீ. என். சேவியர் கூறியுள்ளார்.
இந்த அனல்மின் நிலையத்தால் சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது எனக் குறிப்பிட்ட சேவியர் மின் உற்பத்தியின் போது வெளியேறும் புகை சுத்திகரிக்கப்பட்டு சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே வெளியேற்றப்படும் என்றும் கூறியுள்ளார் இந்த மின் உற்பத்தி நிலையம் பிரதேசவாசிகளின் கடும் எதிர்ப்பின் மத்தியில் உருவாக்கப்பட்டது என்பது குறிபிடத்தக்கது
சீனாவின் கடனுதவியுடன் இந்த அனல்மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மின் உற்பத்தியை ஆரம்பித்தால் குறைந்த செலவில் மின்சாரத்தை உற்பத்தி செய்யமுடியும். இதனால் மின் உற்பத்திக்கு ஏற்படும் பெருந்தொகையான செலவினத்தை குறைக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்துள்ளார் .
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை அமைப்பதற்காக வீடுகளை இழந்த மக்களுக்கு இருபது ஏக்கர் நிலப்பரப்பில் புதிய வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டிருப்பதுடன் விவசாயத்திற்கு மூவாயிரம் ஏக்கர் நிலப்பரப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன

0 comments:

Post a Comment