வெளிநாட்டுப் பிரஜைகள் இலங்கை செல்லும்போது, உல்லாசப்பயணத்திற்காகச் செல்லும் இடங்களில் பிரபல்யமானது ஹிக்கடுவை யாகும். அங்கேயிருந்த பல வெளிநாட்டவர்கள் உல்லாசமாக இருந்த வேளை, அவர்களை புகைப்படம் எடுத்து ஆபாசத் தளங்களில் தரவேற்றினார் என்ற குற்றச்சாட்டில் 4பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று கொழும்பு நீதவான் முன்னால் நிறுத்தப்பட்டனர். இவர்களை தொடர்ந்து விசாரிக்க பொலிசார் அனுமதி கோரியுள்ளனர்.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், இலங்கை சென்று உல்லாசமாக உள்ளவேளை அவர்களுக்குத் தெரியாமல் அவர்களைப் புகைப்படம் எடுத்ததும், அதனை இன்டர்நெட்டில் தரவேற்றம் செய்தது, இலங்கை சுற்றுலாத் துறைக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தவே என இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. புகைப்படங்களில் உள்ளவர்கள் இனி இலங்கைக்கு சுற்றுலாவுக்கு வரமாட்டார்கள் என்றும், அந்த இணையத்தளங்களைப் பார்ப்போர், இலங்கை வர அஞ்சுவார்கள் என்றும் போலிஸ் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
பிந்திக்கிடைத்த தகவல்படி, இவ்வழக்கை விசாரித்த நீதவான் 4ல் வரையும் பிணையில் செல்ல அனுமதித்துள்ளதாக அறியப்படுகிறது.

1 comments:
ஆபாசப் படம் பிடித்தது குற்றமென்று குற்றச்சாட்டில் இலங்கைப் போலீசார் குறிப்பிட்டதாகத் தெரியவில்லையே?
Post a Comment