1000 தமிழ் இளைஞர்களை பொலிஸ் சேவையில் இணைத்து கொள்வதற்கான நேர்முகப்பரீட்சைகள் கடந்த ஜனவரி 19ஆம் திகதி பொலிஸ் திணைக்களத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
உதவிப் பொலிஸ்
பரிசோதகர், பொலிஸ் கான்ஸ்டபில், பொலிஸ் சாரதி போன்ற சேவை வெற்றிடங்களை நிரப்பும் முகமாக ஆண், பெண் இருபாலாருக்கும் இந் நேர்முகப்பரீட்சைகள் இடம்பெறுகின்றன. அனைத்து விண்ணப்பங்களும் வட மாகாணத்தை சேர்ந்தவையாகும். மேலும் நேர்முகப்பரீட்சை மூலம் தெரிவு செய்யப்படுவோர் பொலிஸ் பயிற்சி கல்லூரியில் பயிற்சிப் பெற்றபின் வட மாகாண பொலிஸ் நிலையங்களுக்கு நியமிக்கப்படுவர்.
இம் மாத ஆரம்பத்தில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 16 பெண்கள் உட்பட 336 தமிழ் பொலிஸ் கான்ஸ்டபில்கள் அடிப்படை பயிற்ச்சிகளின் பின் பொலிஸ் சேவையில் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment