தமிழ் மக்கள் மத்தியில் புதிய சிந்தனை

Tuesday, 25 January 2011

யாழ்ப்பாண மாவட்டத்தின் தேர்தல் முடிவு மாவட்ட மக்க ளின் சிந்தனையில் புதிய திருப்பம் ஏற்பட்டிருப்பதை வெளி ப்படுத்துகின்றது. இதுவரை காலமும் தமிழ்த் தேசியவா தம் அங்கு மேலோங்கியிருந்தது. முதலாவது பாராளுமன்றத் தேர்த லிலிருந்து தொடர்ச்சியாக அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளே யாழ்ப்பாண மாவட்டத்தில் அளிக் கப்பட்ட மொத்த வாக்குகளில் கூடுதலானவற்றைப் பெற்று வந்தன. அதாவது மாவட்ட அரசியலில் இக்கட்சிகள் ஒவ்வொரு காலத்தில் ஏகபோகம் வகித்தன. கடந்த தேர்தலில் இந்த நிலைமை மாறி விட்டது.


யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐந்து ஆச னங்களைப் பெற்றுள்ள போதிலும் முன்னைய பெறுபேறுகளுடன் ஒப்பிடுகையில் இது ஒரு பின்னடைவு என்றுதான் கூற வேண்டும். ஐந்து ஆசனங்களில் ஒன்று போனஸ் ஆசனம். அதை நீக்கிப் பார் த்தால், அளிக்கப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்புக்கு நான்கு ஆசனங்களும் அதை எதிர்த்துப் போட்டியிட்ட கட்சிகளுக்கு நான்கு ஆசனங்களும் கிடைத்திருப் பது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வெற்றிப் பெருமிதம் கொள்ளக் கூடியதல்ல.

யாழ்ப்பாண மாவட்டத்தில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் பெரு ம்பான்மையைத் தமிழ்த் தேசியவாதக் கட்சிகள் பெற்றுவந்த நிலை இந்தத் தேர்தலில் மாறிவிட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 65119 வாக்குகளையும் அதற்கு எதிராகப் போட்டியிட்ட கட்சிகளும் சுயேச்சைகளும் மொத்தமாக 83404 வாக்குகளையும் பெற்றுள்ளன. வாக்களித்த மக்களில் பெரும்பான்மையானோர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நிராகரித்து விட்டனர் என்பதே இதன் அர்த்தம்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் அரசாங்க தரப்பு வேட்பாளர்கள் முன் னைய தேர்தல்களிலும் பார்க்க இந்தத் தேர்தலில் கூடுதலான வாக் குகளைப் பெற்றிருப்பதும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைமை வேட்பாளர் டக்ளஸ் தேவானந்தா மாவட்டத்தில் மிகக் கூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றிருப்பதும் விசேடமாகக் கவ னத்தில் கொள்ளப்பட வேண்டியவை.

பொதுத் தேர்தலின் யாழ்ப்பாண மாவட்ட முடிவு புதிய அரசியல் பாதை பற்றிய சிந்தனை மக்களிடம் தோன்றியிருப்பதையே வெளி ப்படுத்துகின்றது. எதிர்ப்பு அரசியல் தமிழ் மக்களை அழிவுகளு க்கே இட்டுச் சென்றுள்ளது என்பதை உணர்ந்து இணக்க அரசியல் பாதைக்கு மக்கள் திரும்புகின்றார்கள் என்பதை இம்முடிவு புலப் படுத்துகின்றது.

மக்களிடம் ஏற்பட்டிருக்கும் மனமாற்றத்தைச் சரியான முறையில் கையாள வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தையும் அரசாங்கத்தின் சார்பில் தமிழ் மக்கள் மத்தியில் செயற்படும் தலைவர்களையும் சார்ந்தது.

தமிழ்த் தேசியவாதக் கட்சிகள் இனப் பிரச்சினையையே ஒவ்வொரு தேர் தலிலும் முக்கிய பிரச்சினையாக முன்வைத்தன. மக்களும் அப்பிர ச்சினையே பிரமாதமானது எனக் கருதியதால் அக்கட்சிகளுக்கு வாக்குகளை அள்ளிக் கொடுத்தார்கள். இந்தத் தடவை தமிழ்த் தேசி யக் கூட்டமைப்புக்குப் பெரும்பான்மையான வாக்குகள் கிடைக்காமை மக்கள் இனப் பிரச்சினையை மறந்துவிட்டார்கள் என்பதற்கான அறிகுறி எனக் கருதலாகாது. இனப் பிரச்சினையின் தீர்வுக்காக இதுவரையும் பின்பற்றிய வழி தவறானது என்பதை மக்கள் விள ங்கிக் கொண்டிருப்பதையே அது புலப்படுத்துகின்றது.

எனவே, இனப் பிரச்சினையின் தீர்வுக்காக நடைமுறைச் சாத்தியமான முயற்சிகளைத் தாமதமின்றி முன்னெடுப்பது தான் மக்களிடம் ஏற்ப ட்டுள்ள மனமாற்றத்தைச் சரியான முறையில் கையாள்வதாக அமையும்.

editor.tkn@lakehouse.lk

0 comments:

Post a Comment