
பிரிட்டனைச் சேர்ந்த ஓவியர் ஒருவர் மனித தலைமயிரினால் நெக்லஸ் ஒன்றை தயாரித்துள்ளார்.
லண்டன் வடபகுதியில் உள்ள மிடில்செக்ஸ் பல்கலைக்கழகத்தில் ஓவியத்துறை மாணவியான கெரி ஹாவ்லி (வயது 23) என்பவரே இவ்வாறு தலைமயிரிலான நெக்லஸை தயாரித்துள்ளார்.
இவர் பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வகுப்பு மாணவியாக இருக்கும்போது ஐந்து நெக்லஸுக்களுக்கான தலைமயிர்களை சேகரிக்க ஆரம்பித்தாராம். மனிதர்களின் தலையிலிருந்து உதிரும் மயிர்கள் குறித்து கவனம் செலுத்தியபோது அவருக்கு இதில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
கெரியின் தாயினுடைய ஜப்பானிய நண்பியே கெரியின் நெக்லஸிற்கான மயிர்களை அதிகம் வழங்கியுள்ளார்.
'எனது தாயின் நண்பி தனது 30 சென்றிமீற்றர் நீளமான தலைமயிரை எனக்கு வழங்கினார். அது உண்மையில் மிகவும் தாராளனமானதாக காணப்பட்டது' என அண்மையியில் தனது பட்டப்படிப்பை பூர்த்தி செய்தவரான கெரி தெரிவித்துள்ளார்.
அவர் தான் தெரிவுசெய்த நகலைப்போன்று தலை மயிர்களையும் கத்தரித்து பசையினால் மிகவும் நுட்பமாக ஒட்டி நெக்லஸ்களை தயாரித்துள்ளார்.
ஒவ்வொரு நெக்லஸையும் செய்வதற்காக 60 மணித்தியாலங்களை அவர் செலவிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment