திருமணம் செய்து வைக்கும் அதிசய இயந்திரம் (காணொளி, பட இணைப்பு)

Saturday, 2 July 2011

பிரித்தானியாவில் அறிமுகம் ஆகி உள்ளது காதலர்களுக்கு திருமணம் செய்து வைக்கின்ற இயந்திரம்.


காதல் ஜோடிகள் இதன் வாய்க்குள் ஒரு டொலர் அல்லது அல்லது பவுண்டு போட்டால் போதுமானது. இயங்க ஆரம்பித்து விடும்.

உங்களுடன் உரையாடும். உங்களுக்கு அறிவுறுத்தல்கள் கொடுக்கும்.

அதன் அறிவுறுத்தல்களின்படி நீங்கள் நடந்து கொள்ள வேண்டும்.

கிறிஸ்தவ பாதிரியார் போல உங்கள் திருமணத்தை நடத்தி வைக்கும்.
ஒரு ஜோடி பிளாஸ்ரிக் மோதிரத்தை உங்களுக்கு கொடுக்கும்.

திருமணத்தின் நிறைவில் உங்களுக்கு திருமண பதிவு சான்றிதழ்களும் வழங்கும்.இத்திருமணம் ஒரு புதுமையான அனுபவம் என்பதால் இளைஞர்கள், யுவதிகள் மத்தியில் இயந்திரம் அதீத பிரபலமும், அமோக வரவேற்பும் பெறும் என்பதில் ஐயம் இல்லை.


conceptshed நிறுவனம் இந்த இயந்திரத்தை கண்டுபிடித்து உள்ளது.0 comments:

Post a Comment