நூலக விழிப்புணர்வு குழுவின் ஏற்பாட்டில் நடத்தப்படுகின்ற இக்கண்காட்சியில் பிரதம விருந்தினராக வட மாகாண கல்விப் பணிப்பாளர் பா.விக்னேஸ்வரனும், சிறப்பு விருந்தினர்களாக தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் ராதா கிருஷ்ணன் மற்றும், காரைநகர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் சிறிவிக்னேஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மங்கள விளக்கேற்றல் இறை வணக்கம் ஆகியவற்றைத் தொடர்ந்து பிரதம விருந்தினர் நாடாவை வெட்டி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய விழா குழு அமைப்பாளர் எஸ் அருளானந்தம் பல இடங்களிலும் முன்பு கண்காட்சியை நடத்தியிருந்த போதிலும், காரைநகரில் தற்போது நடத்துகின்ற நோக்கம் பின்தங்கிய பிரதேசத்தில் உள்ள மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் உட்பட பலரும் பயன் பெற வேண்டும் என்பதற்காகவே என்று தெரிவித்தார்.
இக்கண்காட்சியில் பழைமை வாய்ந்த நாணயங்கள், கருவிகள், விளக்குகள், கைவினைப் பொருள்கள் உட்பட பல்வேறு பொருள்கள் காட்சிக்காக வைக்கப்பட்டு உள்ளன.
தொடர்ந்து 10 நாட்கள் இக்கண்காட்சி இடம்பெறும்.
0 comments:
Post a Comment