பேஸ்புக் பாவனையை இலகுபடுத்தும் வகையில் பேஸ்புக் பட்டனுடன் கூடிய கைத்தொலைபேசிகள் இரண்டினை எச்.டி.சி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இவை சா சா(Cha Cha) மற்றும் சல்சா(Salsa) என பெயரிடப்பட்டுள்ளன. மேற்படி இத்தகைய
கையடக்கத்தொலைபேசிகள் மூலமாக பாவனையாளர்கள் மிக எளிதாக பேஸ்புக்கினை உபயோகிக்க முடியும்.
கையடக்கத்தொலைபேசிகள் மூலமாக பாவனையாளர்கள் மிக எளிதாக பேஸ்புக்கினை உபயோகிக்க முடியும்.
பார்சலோனாவில் நடைபெற்று வரும் உலக மொபைல் காங்கிரஸ் நிகழ்விலேயே இவை காட்சிக்கு வைக்கப்பட்டன. கடந்த சில வாரங்களாகவே இது தொடர்பிலான வதந்திகள் நிலவி வந்த நிலையிலேயே இவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இக்கையடக்கத் தொலைபேசிகள் இரண்டுமே கூகுளின் அண்ட்ரோயிட் இயக்குதளத்தினை கொண்டவை ஆகும். கடந்த இரண்டு வருடங்களாக இவற்றின் தயாரிப்பில் ஈடுபட்டதாக அந்நிறுவனம் தெரிவிக்கின்றது.
கையடக்கத் தொலைபேசிகளின் ஊடாக பேஸ்புக் பாவிப்போரின் வீதம் தொடர்ச்சியாக அதிகரிப்பதனை கருத்தில் கொண்டே இவை தயாரிக்கப்பட்டுள்ளன. வரும் நாட்களில் மற்றைய நிறுவனங்களும் இத்தகைய கையடக்கத் தொலைபேசி உற்பத்தியில் இறங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment