செவ்வாய்க் கிரகம் செல்வதற்கான பயிற்சி பெற உங்களுக்கும் ஆசையா?

Saturday, 5 February 2011

மனிதனின் அடுத்த இலக்கு செவ்வாய்க் கிரகத்தில் கால் வைப்பது அல்லது குறைந்த பட்சம் அதைச் சுற்றி வலம் வருவது.

விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள எல்லா நாடுகளினதும் கனவு பெரும்பாலும் இதுவாகத்தான் உள்ளது.

மனிதனின் அடுத்த இலக்கு செவ்வாய்க் கிரகத்தில் கால் வைப்பது அல்லது குறைந்த பட்சம் அதைச் சுற்றி வலம் வருவது.

விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள எல்லா நாடுகளினதும் கனவு பெரும்பாலும் இதுவாகத்தான் உள்ளது.

ரஷ்யாவில் மார்ஸ்500 என்ற விண் ஓட மாதிரி வில்லையில் இதற்கான பயிற்சிகள் இடம் பெற்று வருகின்றன.

அங்குள்ள விண்வெளி ஆய்வு கூடமொன்றில் இதற்கான ஒத்திகைகள் நடக்கின்றன. தற்போது ஆய்வு கூடத்தில் உள்ள இந்த மாதிரி வில்லையில் கடந்த ஜூன் மாதம் முதல் ஆறு பேர் செவ்வாயில் அல்லது அதற்கு அருகில் காலத்தைக் கழிப்பதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
மிகவும் நெருக்கமானவர்களுடன் மட்டும் ஈமெயிலில் தொடர்பு கொள்ளலாம். இந்தக் கடும் பயிற்சி 520 தினங்களுக்கு நீடிக்கவுள்ளது.

இவ்வளவுக்கும் உண்மையில் ரஷ்யா செவ்வாய்க்கிரகத்துக்கு மனிதனை அனுப்பத் திட்டமிட்டுள்ளது 2037ல்.

0 comments:

Post a Comment