கர்ப்பிணி மனைவியைக் கொன்ற கணவன்!

Saturday, 5 February 2011

கர்ப்பிணியான தனது மனைவியைக் கொன்ற குற்றத்துக்காக பிரிட்டிஷ் கொலம்பியாவில் வான்கூவர் பகுதியைச் சேர்ந்த கணவரை குற்றவாளி என நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

நான்கு வருடங்களுக்கு முன் இடம்பெற்ற சம்பவத்துக்காகவே இவர் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார்.

ஒரு நீரோடைப் பகுதியில் இந்தப் பெண் இறந்து கிடக்கக் காணப்பட்டார். இறந்த உடலையும் காயப்படுத்தியதாக இவர் மீது சாட்டப்பட்டிருந்த குற்றத்திலும் இவர் குற்றவாளியாகக் காணப்பட்டார். முக்தியார் பங்கஹாலி என்பரே இவ்வாறு குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார்.

அவரின் மனைவி மன்ஜித் பங்கஹாலி இறக்கும் போது பல மாத கர்ப்பிணியாக இருந்தார். இவர் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்த போது இறந்தவரின் உறவினர்கள் பலர் நீதிமன்றத்தில் இருந்தனர்.

அவர்கள் கண்ணீர் விட்டு அழுததைக் காணக்கூடியதாக இருந்தது. கொலை நடந்த போது இவர் ஒரு ஆசிரியராக இருந்துள்ளார்.

விசாரணைகளின் போது இவர் தெரிவித்த சில முன்னுக்குப் பின் முரணான கருத்துக்கள், மனைவியின் கையடக்கத் தொலைபேசியை இவர் பாவித்தமை, கொலை நடந்த அன்று இவர் லைட்டர் ஒன்றைக் கொள்வனவு செய்துள்ளமை பாதுகாப்புக் கமராவில் பதிவாகியுள்ளமை என்பனவற்றின் அடிப்படையிலேயே இவர் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார்.

கழுத்தை நெரித்து கொன்ற பின் சடலத்தை தீயால் காயப்படுத்தி பின் நீர் நிலையில் சடலம் போடப்படிருக்கலாம் என்று நிரூபணமாகியுள்ளது.

0 comments:

Post a Comment