புராதன மானிட நாகரிகம், பண்டைய அறிவு, கிழக்குலக தத்துவ ஞானம் ஆகியவற்றை கௌரவிக்கும் வகையில் முற்றிலும் தேக்கு மரங்களால் ஆன பிரமாண்டமான கட்டிடம் ஒன்று தாய்லாந்து நாட்டில் எழுந்து வருகின்றது.
இக்கட்டிடம் பார்க்கின்றமைக்கு ஒரு ஆலயம் போலவோ அல்லது அரச மாளிகை போலவோ தோன்றக் கூடும். ஆனால் உண்மை அது அல்ல. |
தேச சஞ்சாரியான லிக்லிலியா பாண்ட்டல் என்கிற கோடீஸ்வரரின் அபிலாசையாகதான் இக்கட்டிடம் எழுகின்றது. இவர் இக்கட்டிடத்துக்கு உண்மையின் உறைவிடம் என்று பெயர் சூட்டி இருந்தார். |
இவர் நிர்மாணப் பணிகளை 1981 ஆம் ஆண்டு ஆரம்பித்தார். |
மரங்களை குடைந்து மேற்கொள்ளப்படுகின்ற சிற்ப-சித்திர வேலைப்பாடுகள் பார்ப்பவர் மனங்களைக் கொள்ளை கொள்கின்றன. இவ்வேலைப்பாடுகளை நாள்தோறும் 250 மரவேலை பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். |
தாய்லாந்தில் சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் ஈர்க்கின்ற இடங்களில் இதுவும் ஒன்றாகும் |
கட்டிட நிர்மாணம் இன்னமும் நிறைவு அடையாத போதிலும் உல்லாசப் பயணிகள் வகை தொகை இன்றி இங்கு படை எடுக்கத் தொடங்கி உள்ளார்கள். |
0 comments:
Post a Comment