சவர்க்காரம் உண்ணும் விசித்திரப் பெண்

Friday, 11 February 2011

உணவுகள் பல வகையுண்டு. வயிற்றுப் பசிக்காக ஒவ்வொருவரும் ஏதாவது உணவை உட்கொள்கின்றோம். ஆனால் மனிதர்களில் இருந்து வித்தியாசமாக ஒரு பெண்மணி சவர்க்காரத்தை பிரதான ஆகாரமாக உண்கிறார்.

NOT a balanced meal: Doctors say if Tempestt doesn't kick her habit - which they blame on stress - it could kill her அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த டெம்பஸ்ட் ஹென்டர்ஸன் என்ற 19 வயது பெண்ணே இந்த விசித்திரப் பழக்கத்தை உடையவர். காலை எழுந்தவுடன் சவர்க்காரத்தை சாப்பிட்டு தண்ணீருக்கு பதிலாக சலவைத் தூளை அருந்தி வருகிறார்.


 சவர்க்காரம் மற்றும் சலவைத்தூள் ஆகியன மிகவும் காரமான உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பொருள் என்பது நாம் அறிந்ததே. இவ்வாறிருந்தும் தொடர்ச்சியாக இப் பெண் இவ்வாறு சாப்பிட்டு வருகிறார் என்பது ஆச்சரியமாக உள்ளது. Tempestt Henderson is addicted to eating soap and laundry detergent சிறு வயது முதல் சலவைத் தூள் மணத்தை நுகர்வது தனக்கு பிடிக்கும் என்கிறார்.

சிறு பிள்ளையாக இருக்கும்போது ஒரு தடவை தற்செயலாக சலவைத் தூள் விரலில் பட்டது. அதனை நக்கிப் பார்த்த போது உப்புத் தன்மையோடு மிகவும் சுவையாகவும் இருந்தது என்கிறார். இச் செயற்பாடு உடலுக்கு அச்சுறுத்தலாக அமையும் என வைத்தியர்களால் அறிவுறுத்தப்பட்டும் பழக்கத்தை தன்னால் விட முடியவில்லை என டெம்பஸ்ட் ஹென்டர்ஸன் கூறுகிறார். சவர்க்காரங்களை விரும்பி உண்ணுவதில் அலாதியான சந்தோசம் ஏற்படுவதாக தெரிவிக்கிறார்.


0 comments:

Post a Comment