எந்த ஆயுதமும் இன்றி நிராயுதபாணியாக இருந்த தங்கள் தந்தையை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தாமல் அவரை அமெரிக்கப் படையினர் சுட்டுக்கொன்றது எவ்வாறு நியாயமாகும் என்றும்
ஒசாமா கொல்லப்பட்ட முறை பற்றி ஐ.நா.விசாரிக்க வேண்டும் என்றும் ஒசாமாவின் மகன் ஒமர் பின் லேடன் கேட்டுள்ளார் என நியூயோர்க் ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்ட சூழலும், அவருடைய உடலை கடலில் போட்டதும் எந்த அடிப்படையில் என்பதை ஐ.நா.கண்டறிய வேண்டும் என்றும், ஒசாமாவின் படுகொலையும், அவருடைய குடும்பத்தினரை சுட்டதும் அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரான என்றும் ஒசாமாவின் மகன் கூறியுள்ளதாக நியூ யோர்க் ரைம்ஸ் நாளிதழ் கூறியுள்ளது.
‘ஒசாமா பின் லேடனை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தாமல், தன்னிச்சையாக முடிவெடுத்து கொன்றுவிட்டு, நியாயம் வழங்கியதாக கூறுவது எந்த அடிப்படையில் என்று வினவியுள்ள ஒசாமாவின் மகன் ‘அவரை நீதிமன்றத்தில் நிறுத்தியிருந்தால் பல உண்மைகள் உலக மக்களுக்குத் தெரிந்திருக்கும்’ என்று கூறியுள்ளனர்.
‘தன்னிச்சையாக கொலை செய்வது அரசியல் பிரச்சனைகளுக்கு தீர்வை தந்துவிடாது என்பதே தங்கள் நிலைப்பாடு என்றும் ஒசாமாவின் மகன் கூறியுள்ளார்.

0 comments:
Post a Comment