அல்கொய்தா தீவிரவாதி ஒசாமா பின்லேடன் (54) பாகிஸ்தானில் அபோதாபாத்தில் அமெரிக்க ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டார். இது தங்களுக்கு தெரியாது. முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமல் அமெரிக்கா உளவுத்துறை பின்லேடனை சுட்டுக் கொன்றது என பாகிஸ்தான் தெரிவித்து வருகிறது.
ஆனால், பின்லேடனை உயிருடனோ, அல்லது பிணமாகவோ பிடிக்க பாகிஸ்தானுடன் கடந்த 10 ஆண்டுக்கு முன்பே அமெரிக்கா ரகசிய ஒப்பந்தம் செய்துள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
கடந்த 2001-ம் ஆண்டில் அமெரிக்கா மீது அல்-கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் பதுங்கியிருந்த பின்லேடனை அமெரிக்க ராணுவம் வேட்டையாட தொடங்கியது. அப்போது தோரா போரா மலைப்பகுதியில் பதுங்கியிருந்த பின்லேடன் அங்கிருந்து தப்பி பாகிஸ்தானுக்குள் புகுந்து விட்டார்.
இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பார்வை பாகிஸ்தான் மீது விழுந்தது. இதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஷ்டபிள்யூபுஷ், பாகிஸ்தானில் அதிபராக இருந்த பர்வேஷ் முஷரப்புடன் ஒரு ரகசிய ஒப்பந்தம் செய்தார். அதன்படி பின்லேடனையும், அவரது உதவியாளர் அய்மான் அல்-ஜவாரியையும் உயிருடனோ அல்லது பிணமாகவோ தன்னிச்சையாக பிடிக்க அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் அரசு அதிகாரம் வழங்கியது.
10 ஆண்டுகளுக்கு முன்பே போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் தற்போது அமெரிக்கா தன்னிசையாக பின்லேடனை சுட்டுக் கொன்று இருப்பதாக பாகிஸ்தானின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இது குறித்து போடப்பட்ட ஒப்பந்தம் கடந்த 2008-ம் ஆண்டுடன் காலாவதியான நிலையில் அப்போது அதிபராக இருந்த முஷரப்புடன் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.
நிலைமை இவ்வாறு இருக்க இப்பிரச்சினையை பொதுமக்களிடம் இருந்து சமாளிக்க பாகிஸ்தான் ஒன்றும் தெரியாததுபோல் நாடகமாடி அமெரிக்கா மீது பழி சுமத்துகிறது. அதைப்பற்றி எங்களுக்கு கவலை இல்லை என அமெரிக்க முன்னாள் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இத்தகவலை லண்டனில் இருந்து வெளியாகும் ஒரு பத்திரிகை அறிவித்துள்ளது.

1 comments:
சும்மா இப்படித்தான் கிளப்பி விட்டுட்டே இருப்பாங்களே தவிர உண்மை அந்த....
இல்லை எந்த ஆண்டவனுக்கோ வெளிச்சம்..
Post a Comment