சிறுநீரக வியாதியின் அறிகுறிகள் அதனைக் கட்டும்ப்படுத்தும் முறைகள் என்ன ?

Tuesday, 24 May 2011

அமெரிக்கா நாட்டில் 12 பேரில் ஒருவருக்கு சிறுநீரகக் கோளாறு அல்லது சிறுநீரகக் குழாய், சிறுநீர்ப்பை சம்பந்தப்பட்ட உபாதைகள் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. நம் நாட்டிலும் நிறையப் பேருக்கு சிறுநீரக வியாதிகள் இருப்பதே தெரியாமல் இருக்கின்றனர். சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வில் இந்தியாவில் சுமார் 7 கோடிப் பேர்களுக்கு பல்வேறு விதமான சிறுநீரக வியாதிகள் ஆரம்ப கட்டம் முதல் முற்றிய நிலை வரை உள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆண்டிற்கு சுமார் 80 லட்சம் பேருக்கு புதியதாக சிறுநீரக வியாதி வருவதாகவும் 90,000 பேர் முற்றிய சிறுநீரக செயலிழப்பாக மாறி அவர்களுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அல்லது சிறுநீரக மாற்று சிகிச்சை தேவைப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.

சிறுநீரக வியாதியின் அறிகுறிகள் அதனைக் கட்டும்ப்படுத்தும் முறைகள் என்ன ?

1. சிறுநீரக வியாதி இல்லையா என்பதை ஒருவர் எவ்வாறு கண்டறிவது ?

நான் படித்த ஒரு கட்டுரையில் சிறுநீரகங்களின் வேலைத்திறன் 75% குறையும் வரை பாதிக்கப்பட்டவர் எந்த தொந்தரவையும் உணர மாட்டார் என்று சொல்லப்பட்டிருந்தது அது உண்மையா ?

இது முழுக்க உண்மை. சிறுநீரகங்களைப் பொறுத்த வரை நாம் இரண்டு விஷயங்களை புரிந்து கொள்ள வேண்டும். ஒன்று சிறுநீரகங்களைப் போல சக்திக்கு மீறி உழைக்கும் உறுப்புக்கள் நம் உடலில் இல்லை. அதனால் சிறுநீரகங்கள் 70௮0% அவற்றின் வேலைத் திறனை இழக்கும் வரை நம் உடலுக்கு பெரிய கஷ்டம் இல்லாமல் பார்த்துக் கொள்கின்றன.

அதனால் ஆரம்ப நிலை சிறுநீரக செயலிழப்பை நம்மால் உணர முடிவதில்லை. இரண்டாவதாக ஆரம்பத்தில் தெரியும் அறிகுறிகளும் சாதாரணமான மற்றும் பொதுவானவையாக இருக்கின்றன. உதாரணமாக களைப்பு, சோர்வு, வேறு சில அறிகுறிகளான உயர் இரத்த அழுத்தம், இரத்த சோகை, சிறுநீரில் புரத ஒழுக்கு ஆகியன மருத்துவ, ஆய்வக பரிசோதனைகளில் மட்டுமே தெரிய வரும். எனவே தான் சிறுநீரக பாதிப்பு அல்லது செயலிழப்பை ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்து மிகவும் கடினமாக உள்ளது.

2. என்றாலும் சிறுநீரக பாதிப்பின் ஆரம்ப (எச்சரிக்கை)அடையாளங்கள் என்னென்ன என்று தெரிந்தால் அதை வைத்து சிலரேனும் சிறுநீரக பாதிப்பின் ஆரம்ப கட்டத்தை அறிந்து பயன் பெற உதவக் கூடுமல்லவா ?

திடீரென்று சிறுநீரகங்களை பாதிக்கும் சில வியாதிகளல்லாது (பாம்பு கடி, வயிற்றுப் போக்கு போன்ற காரணங்கள்) நிரந்தமாக சிறுநீரகங்களை செயலிழக்க வைக்கும் நோய்களால் வரும் சிறுநீரக பாதிப்பின் ஆரம்ப நிலையில் எதுவும் அறிகுறிகள் வரலாம். அவையாவன: கை, கால் முகம் வீக்கம், காரணம் தெரியாத தொடர் சோர்வு, அதிக களைப்பு, தோலில் அரிப்பு, தோல் நிறம் மாறுதல் முக்கியமாக வெளுத்துப் போகுதல், சிறுநீரில் இரத்தம் அல்லது அளவு குறைவாக போதல், உயர் இரத்த அழுத்தம், அடிக்கடி (முக்கியமாக இரவில்) சிறுநீர் கழித்தல்.

உண்மையில் சொல்லப் போனால் தங்கள் சிறுநீரகங்களை பாதுகாத்து கொள்ள நினைக்கும் யாரும் சில எளிய பரிசோதனைகளை செய்து பார்த்துக் கொள்வதன் மூலம் மட்டுமே சிறுநீரகங்களின் ஆரோக்யத்தை உறுதி செய்து கொள்ள முடியும். அவையாவன சிறுநீர் பரிசோதனை, இரத்தத்தில் யூரியா, கிரியேட்டினின் இவற்றின் அளவு. இவைகளில் ஏதேனும் கோளாறு என்றால் மட்டுமே மற்ற பரிசோதனைகள் தேவைப்படும்.

3. அப்படியென்றால் அடிக்கடி சிறுநீர் கழிப்பவர்களுக்கு சிறுநீரக செயலிழப்பு இருக்குமா ?

அப்படியல்ல. அது வரை சரியான அளவு அதாவது பகலில் 3௪ முறை இரவில் படுக்கச் செல்லும் முன் ஒரு முறை சிறுநீர் கழிப்பு என்று இருந்தவர்கள் திடீரென அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வந்தால் அதற்கு முதல் காரணம் சிறுநீரக பையில் கிருமித் தாக்குதல்-சிறுநீரகப்பை அழற்சி (புண்) பெண்களுக்கு ஆண்களை விட இது இன்னும் அதிகம். இது எளிதில் குணபடுத்தக் கூடிய ஒரு சிறிய தொந்தரவு தான்.

0 comments:

Post a Comment