நல்ல பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொடுப்பதே பெற்றோர் தேடி வைக்கும் உண்மையான செல்வம்

Friday, 30 September 2011

சமுதாய மட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள உறவு முறைகளில் மிகவும் மகத்தானது பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையிலான இரத்த உறவுப் பந்தம்தான். நல்லவற்றினதும் கெட்டவற்றினதும் ஊற்றாகவே இது அமைகிறது

திருமணத்திற்கு முந்திய காதலின் தோல்வி 'நீ எந்தக் குடும்பத்தில் பிறந்தாய் என்பது முக்கியமல்ல..எப்படிப்பட்ட குடும்பத்தை உருவாக்கப் போகிறாய் என்பதே முக்கியமானது"-

திருமணம் என்றவுடன் பெற்றோரின் சிந்தனையில் கவலையாகவும் எதிர்பார்ப்புடனும் சுழற்சி முறையில் வருவது மதம், கலாசாரம், குடும்பப் பின்னணி,கல்வி, பொருளாதாரம், வயது இடைவெளி என்பவைகளே முக்கிய அம்சங்களாகக் கருத்தில் கொள்ளப்படுகிறது.

51 நோய்களுக்கும் குணப்படுத்தவோ தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ மருந்துகள் இருக்கிறது என்று கூறுவது தவறானது

Thursday, 29 September 2011

ஆங்கில மருந்துகள் எந்தப் பயனும் அற்றவை என்பதையும் பல நோய்களுக்கு ஆங்கில மருத்துவத்தில் மருந்தே இல்லை

கழுதை ஒன்று வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பது மத்திய அரசை பரிகாசம் செய்கின்ற நடவடிக்கை

அரசியலில் நிறுத்தப்பட்டு உள்ளது கழுதை ஒன்று. நம் நாட்டில் அல்ல. பல்கேரியாவில். இங்கு எதிர்வரும் 23 ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தல் இடம்பெற உள்ளது.

தெற்காசியாவின் ஐரோப்பிய பழங்குடியினர்

Wednesday, 28 September 2011

ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையோர மலைப் பகுதியில், கிரேக்க வம்சாவளியினரான பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். "கலாஷா" என்றழைக்கப்படும் பழங்குடியினர், உலகில் இன்று அருகி வரும் கலாஷ் மொழியைப் பேசி வருகின்றனர்.

லிபிய மக்கள் அல்லாஹ்வின் ஆட்சியை உருவாக்குவதற்காக போராடவில்லை



லிபியாவில் மக்கள் புரட்சி என்பது நாம் பொதுப்படையாக அறிந்த விடயம். சர்வாதிகாரியும் மனித குல விரோதியுமான கேர்ணல் கடாபிக்கு எதிராக மக்கள் புயலாகக் கிளர்ந்தது ஒன்றும் புதுமையல்ல. போராட்ட நெருப்பு கடந்த 30 வருடங்களாக நாட்டினுள்ளே புகைந்து கொண்டே இருந்தது. எகிப்தின் வீழ்ச்சியுடன் லிபிய புரட்சி எழுச்சி கண்டது. இந்த இடத்தில் நாம் உன்னிப்பாக முக்கிய சில விடயங்களை கவனிக்க வேண்டும்.

உண்மைக் குற்றவாளிகள் யார்? மஹிந்த அரசை கூண்டோடு சதாம் ஹீசைனைப் போல கயிற்றில் தொங்கவிடும் என கடைசி நம்பிக்கையில் காத்திருக்கிறார்கள்.

இலங்கையில் விடுதலைப் புலிகளிற்கு எதிராக நடைபெற்ற யுத்தத்தில் அப்பாவி பொது மக்கள் பல்லாயிரக்கணக்கில்

1948 இற்கு முந்தைய பலஸ்தீன் (வீடியோ)



கள்ளக் காதலிக்குக் கொடுத்த சொத்து 543 மில்லியன்

தனது முன்னாள் கள்ளக்காதலி தன்னை மிரட்டியதாக் கூறி அவருக்குச் சிறைத்தண்டனை வாங்கிக்கொடுக்க முயற்சித்த உலகின் பணக்காரர்களில் ஒருவரான சாமுவேல் ரக் லீயின் (71) பொய்ப்பித்தலாட்டம் நேற்று பிரித்தானியாவின் நீதிமன்றத்தில் வெளிக்கொண்டுவரப்பட்டது.

மணவாழ்க்கைக்கு சிறப்பான ”டிப்ஸ்”ஒரு நாளைக்கு ஒரு முறையாவது "I LOVE YOU" சொல்லுங்கள். தவறு செய்தால் ஒத்துக் கொள்ளுங்கள்

திருமணம் என்பதை "ஆயிரம் காலத்து பயிர்" என்பார்கள், காரணம் தலைமுறை தலைமுறையாய் சொந்த பந்தங்கள் சேர்ந்து வாழவேண்டும் என்பதற்காகத்தான். மேலும் "மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்" என்ற பழமொழியும் உண்டு. இந்த வரத்தை கடைசி வரைக்கும் காப்பற்றுவதற்கும் ஆண்களுக்கு பொறுப்பும் உண்டு.

அழகும் அறிவும் நிறையப் பெற்ற பாலியல் தொழிலாளி. காரில் செக்ஸ் வைக்க ஆசை

சீன நாட்டின் அதிகம் படித்த பாலியல் தொழிலாளியை அந்நாட்டுப் பொலிஸார் கடந்த வாரம் கைது செய்து உள்ளார்கள். இவரின் பெயர் Ruo Xiaoan. வயது 22. அழகும் அறிவும் நிறையப் பெற்றவர்.

வெளிநாட்டில் நம்மவர் இழப்பவை என்ன? (வீடியோ இணைப்பு)

Tuesday, 27 September 2011

வெளிநாட்டுக்கு செல்கின்றமையால் நாம் எவற்றை எல்லாம் இழக்கின்றோம்? நாம் பெற்றோர் எவற்றை எல்லாம் இழக்கின்றனர்?

இவ்வீடியோவை செவிமடுத்துப் பாருங்கள். உங்கள் மனம் நிச்சயம் வலிக்கத்தான் செய்யும்.


கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்றால் ஒத்துவராது.
ஏழ்மையில் இருக்கும் ஒருவருக்கு செல்வம் இல்லையே என்ற மனவருத்தம்/ஏக்கம் இருக்கும். வெளிநாட்டில் வாழுபவருக்கு செல்வம் இருக்கும் ஆனால் இவருக்கு உறவுகள் அருகில் இல்லையே என்ற வருத்தம் இருக்கும். ஆனால் சில வருடங்களில் இந்த வருத்தம் மறைந்துவிடும் .
ஒருவர் தானோட சொந்த விருப்பில்தான் வெளிநாட்டுக்கு செல்கிறார். அவரை யாரும் பிடித்து வைக்கவில்லை.

வேண்டாம் இனவாதம்!

Sunday, 18 September 2011

இன்று இலங்கையில் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் எதிரான பிரசாரங்கள் திட்டமிட்ட வகையில் செய்யப்பட்டு வருகின்றது பல இணைதளங்கள் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் இது தொடர்பான பிரச்சாரத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது  இது தொடர்பாக   தகவல்களையும் லங்காமுஸ்லிம்  பதிவு செய்திருந்தது.