தீங்கு விளைவிக்கும் உணவுப் பொருட்கள்: இறக்குமதி, விற்பனைக்கு இன்றுமுதல் தடை

Thursday 30 June 2011

மனிதனுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய வகையில் உணவுப் பொருட்களைத் தயாரித்தல், களஞ்சியப்படுத்தல், பயன்படுத்தல், விநியோகித்தல், இறக்குமதி செய்தல், உற்பத்தி செய்தல் மற்றும் விற்பனைக்காக பிரசாரம் செய்தல் ஆகிய செயற்பாடுகள் யாவும் இன்று முதலாம் திகதி முதல் தடைசெய்யப்படுகின்றது.
இது தொடர்பான விஷேட அறிவிப்பை சுகாதார அமைச்சு நேற்று விடுத்தது.
1980ம் ஆண்டின் 26ம் இலக்க உணவுச் சட்டத்தின் 32வது ஷரத்தின் கீழ்
அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்நடவடி க்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. இச்சட்ட ஏற்பாட்டை மீறுபவர்களு க்கு எதிராக கடும் சட்ட நடவடி க்கை எடுக்குமாறு அமைச்சர் மைத்திரிபால சிறிசேன உணவுப் பரிசோதகர்களுக்கும், பொது சுகாதாரப் பரிசோதகர்களுக்கும் கண்டிப்பான அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
இந்தத் தீர்மானத்திற்கு அமைய உணவு அல்லாத ஏதாவதொரு உற்பத்தி பொருளுக்கு பக்கட் பண்ணுவதற்குப் பயன்படுத்தப்படும் பொலித்தீன், காகிதாதிகள், கொள்கலன்கள், டின்கள் போன்றவற்றை உணவுப் பொருட்களை பொதியிடவோ, களஞ்சியப்படுத்தவோ, விற்பனை செய்யவோ, பாவிக்கவோ கூடாது. இவ்வாறான செயற்பாடுகளும் இன்று முதல் தடைசெய்யப்படுவதாக அமைச்சு அறிவிக்கிறது.
காய்கறி வகைகளை களஞ்சியப்படுத் தவோ, அல்லது விற்பனைக்கு வைப்பதற் காகவோ பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பெட்டிகளோ, பலகையிலான பெட்டிகளோ பழ வகைகளை களஞ்சியப்படுத்த, விற் பனைக்கு வைக்க பயன்படுத்த முடியும். எனினும் அவை மீள் துப்புறவு செய்யப் பட்ட பின்னரே பயன்படுத்த முடியும்.
அத்துடன் விற்பனைக்காக வைக்கப்படும் உணவுப் பொருளின் உறையினுள் ஏதேனும் லேபல்கள், விளையாட்டு பொருட்கள் அல்லது ஏதேனும் பொருட்களை வைத்தல் கூடாது.
அத்துடன் உடனடியாக உணவுக்காக பயன்படுத்தப்படும் உணவுப் பொருட்கள் மீது நேரடியாகபடும் விதத்தில் லேபள்களோ, பொருட்களோ ஒட்டப்பட்டிருக்க கூடாது. இவ்வாறான உணவுப் பொருட்கள் வெளியே தெரியும்படி செலோபின் பேப்பரினால் சுற்றப்பட்டிருந்தால் மட்டும் வெளிப்புறம் லேபள் ஒட்டப்படலாம். எனினும் உணவுப் பொருளின் மீது லேபள் ஒட்டப்படக்கூடாது.
இவ்வாறான உணவுப் பொருட்கள் உடனடியாக தடைசெய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment