தொப்பி அணிந்த விண்ணப்பங்களை நிராகரித்தமை அடிப்படை மனித உரிமை மீறல் : நீதியமைச்சர்

Thursday 30 June 2011

தொப்பி அணிந்து விண்ணப்பிக்கப்பட்ட அடையாள அட்டை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டமை அடிப்படை மனித உரிமை மீறல் என்று நீதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். தேசிய அடையாள அட்டை பெறுவதற்காக
தொப்பி அணிந்த நிலையில் மாகோள அனாதை இல்ல மாணவர்கள் சமர்ப்பித்த விண்ணபங்கள் நிராகரிக்கப் பட்டமை தொடர்பாக நீதியமைச்சர் ரவூப் ஹகீம் ஆட்பதிவு திணைக்களப் பணிப்பாளருக்கு தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
தொப்பி அணிந்தமைக்காக நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களை ஏற்றுகொண்டு அவர்களுக்கான தேசிய அடையாள அட்டையை துரிதமாக வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு நீதியமைச்சர் ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகத்துக்கு எழுதியுள்ள அவசரகடிதத்தில் அறிவுறுத்தியுள்ளார்.
விரிவாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் இல. ஆர் குறைபாடு என்று குறிப்பிட்டு 12.05 .2011 அன்று திகதியிட்டு பியகமை பிரதேச செயலாளருக்கு தாங்கள் அனுப்பியுள்ள கடிதத்தில் அர்த்தமற்ற காரணத்தை கூறி மாகோள முஸ்லிம் அனாதை இல்லத்தை சேர்ந்த மாணவர்களின் தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப் பட்டமை எனது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த அனாதை இல்லத்தின் ஏனைய மாணவர்கள் உட்பட புகைப் படங்களில் தொப்பி அணிந்து காணப்படும் ஆண்களுக்கு பர்தா ஹிஜாப் அணிந்து காணப்படும் பெண்களுக்கும் தேசிய அடியாள அட்டைகள் வழங்குவது தங்களின் திணைக்களம் பின்பற்றி வரும் ஒரு நடைமுறை என்பதை சுட்டிகாட்ட விரும்புகின்றேன் .
இஸ்லாமிய கலாசாரத்துக்கு ஏற்ப தொப்பி அணிவது சீருடையில் ஒரு அங்கமாகும் இவ்வாறிருக்க எத்தகைய சட்ட ரீதியான அடிப்டையும் இன்றி அடையாள அட்டைகளுக்கான விண்ணப்பங்களை நிராகரித்திருப்பது அடிப்படை மனித உரிமைகளை மீறும் செயலாகும் 1966 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி வெளியான 14680 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் மூலம் தர்ம நிறுவனமாக பிரகடனப் படுதபட்டுள்ள மாகோன முஸ்லிம் அனாதை இல்லத்தில் நாட்டில் பெற்றோரை இழந்த பிள்ளைகள் பாடசாலை பாடங்களோடு இஸ்லாமிய சமையம் மற்றும் ஷரியா சட்டம் என்பனவற்றையும் படித்து மௌலவி பட்டதை பெற்றுவருகின்றனர் என்பதை தங்களது கவனத்துக்கு கொண்டுவருகின்றேன்.
இது குறித்து நாட்டின் ஏனைய பகுதிகளில் இருந்தும் பலர் புகார்கள் தெரிவித்துள்ளனர் வட மேல் மாகாண சபை உறுப்பினர் ஏஹ்யா ஆப்தீன் புத்தளத்தில் பல விண்ணப்பங்கள் நிரகரிகபட்டதாக தெரிவித்தார் என்று அதில் குறிபிடப்பட்டுள்ளது.
தொப்பி அணிந்து விண்ணப்பிக்கப்பட்ட அடையாள அட்டை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டமை அடிப்படை மனித உரிமை மீறல்அல்ல. இஸ்லாமிய கலாசாரத்துக்கு ஏற்ப தொப்பி அணிவது சீருடையில் ஒரு அங்கமாகும். தொழுகையின்போது தலையில் தொப்பி அணியவெட்கப்படும் முஸ்லிம்களுக்கு அடையாள அட்டையில் மாத்திரம் ஏன் தொப்பிஅணிந்திருக்க வேண்டும். அடையாள அட்டை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டமை சரியே!

0 comments:

Post a Comment