அல் கொய்தா இயக்கத்தில் பிளவு: ஒசாமாவை காட்டிக் கொடுத்தாரா

Friday 6 May 2011

அல் கொய்தா அமைப்பை தனது முழுக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வருவதற்காக, பின்லேடனின் பாதுகாப்பை சீர்குலைத்து அவருக்கு துரோகம் இழைத்து கடைசியில் அவரது மரணத்திற்கும் காரணமாகியது அல் ஷவாஹிரி என்று சவூதி ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர் அல் கொய்தா இயக்கம் மிகப் பெரிய இயக்கமாக உருவெடுத்தது. இந்தநிலையில் 2004ம் ஆண்டு பின்லேடனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து இயக்கத்தின் நடவடிக்கைகளை அல் ஷவாஹிரியே கவனித்து வந்தார்.

அப்போது அவர் அல் கொய்தாவை தனது முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர திட்டமிட்டு செயல்பட்டார்.

இதனால் அவருக்கும், பின்லேடனுக்கும் இடையே பனிப்போர் வெடித்தது. இந்த நிலையில், ஷவாஹிரி தலைமையில் எகிப்தியர்களைக் கொண்ட அல் கொய்தாவினர் தனித்து செயல்பட ஆரம்பித்தனர்.

மேலும், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் பழங்குடியினர் பகுதியில் பத்திரமாக பதுங்கியிருந்த பின்லேடனுக்குத் தவறான தகவல்களைக் கூறி அங்கிருந்து அவரை வெளியேற வைத்து அபோட்டாபாட்டில் குடியேறச் செய்தது ஷவாஹிரி ஆகும். இதனால்தான் பின்லேடனின் பாதுகாப்புக்கு பெரும் சீர்குலைவு ஏற்பட்டது.

மேலும் பின்லேடனின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்டு செயல்பட்டார் எகிப்தைச் சேர்ந்தவரான சைப் அல் அப்தல். இவர் கடந்த ஆண்டுதான் ஈரானிலிருந்து பாகிஸ்தானுக்குத் திரும்பியிருந்தார். செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர் பின்லேடனின் மகன் மற்றும் குடும்பத்தினரை இவர்தான் ஈரானுக்கு அழைத்துச் சென்றார்.

பின்லேடனுக்கான தகவல் அளிப்பவராக செயல்பட்டு வந்த நபர் மூலம்தான் அமெரிக்கப் படையினர் பின்லேடனை நெருங்க முடிந்தது. இவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர். தன்னை அமெரிக்கர்கள் கண்காணித்து வருவது இவருக்குத் தெரியும். இருந்தும் வேண்டும் என்றே அதை கண்டு கொள்ளாதது போல நடந்து கொண்டு மறைமுகமாக, பின்லேடன் இருப்பிடத்தை அமெரிக்கர்களுக்கு உறுதிப்படுத்தி விட்டார் இவர் என்று அந்த செய்தி கூறுகிறது.

0 comments:

Post a Comment