எகிப்து அரசியல் தலைவர்களின் சொத்துக்களை பிரான்ஸ் முடக்க வேண்டும்

Tuesday 15 February 2011


கடந்த 1981 ம் ஆண்டு முதல் 30 ஆண்டுகளாக சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்த ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
ஜனவரி 25 ம் திகதி முதல் 18 நாட்களில் மக்கள் பெரும்
போராட்டம் நடத்தியதை தொடர்ந்து முபாரக்கின் ஆட்சி பறிபோனது.
தற்போது எகிப்தில் புதிய இடைக்கால நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிர்வாகத்தினர் தங்களது எகிப்து அரசியல் தலைவர்களின் சொத்துக்களை பிரான்ஸ் முடக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
பிரான்ஸில் உள்ள எகிப்து தலைவர்களின் சொத்துக்கள் முடக்கம் குறித்து புதிய நிர்வாகம் உறுதியாக உள்ளது. சொத்து முடக்கத்தில் முபாரக் சொத்து விவரங்கள் குறித்து குறிப்பிடவில்லை. இது குறித்து பிரான்ஸ் வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் பெர்னார்டு வாலரோ கூறுகையில்,"எகிப்து நிர்வாகத்தினருக்கு தாங்கள் ஒத்துழைப்பு அளிப்போம்" என்றார்.
ஜரோப்பிய ஒன்றிய வெளியுறவு கொள்கை தலைவர் காதரின் ஆஷ்டன் முன்னாள் தெரிவித்த கருத்தில், முபாரக் சொத்து முடுக்கம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அதனை பிரதிபலிக்கும் வகையில் பிரான்ஸ் வெளியுறவு செய்தி தொடர்பாளர் பெர்னார்டு வாலரோ கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment