தண்ணீருக்கு அடியில் நம்ப முடியாத மிகவும் ஆபத்தான உயிரினம் முதலைதான்

Thursday 17 February 2011


ஜிம்எபர்னெட்டி ஒரு 52 வயதான படப்பிடிப்பாளர். ஆபத்தானவைகளைப் படம்பிடிப்பதென்றால் அவருக்கு அலாதிப்பிரியம்.

தண்ணீருக்குள் இவ்வளவு நெருக்கமாக முதலைகளைப் படம் பிடிப்பது எவ்வளவு ஆபத்தானது என்பது எல்லோரும் அறிந்த விடயமே.

இந்த முதலைகளை ஏன் இவ்வளவு நெருக்கமாப் படம் பிடித்தீர்கள் என்று இந்த மனிதரைக் கேட்டால், அவற்றின் பல் வரிசை அழகாக இருக்கின்றது.

அதுமட்டுமல்ல அந்த பற்களைக் கொண்டு அவை சிரிக்கும் அழகு எனக்கு நன்றாகப் பிடித்திருந்தது என்று விளக்கம் கூறுகின்றார்.

ஜிம்மைப் பொறுத்தமட்டில் முதலைகளின் இந்தத் தோற்றம் அழகான சிரிப்பாம்.

அதனால் தான் பக்கத்தில் நெருங்கி நெருங்கிப் படம் பிடித்துள்ளார்.

புளோரிடாவின் எவர்கிலேட்ஸ் குளங்களில் சேற்றுக்குள் புதைந்திருந்து இந்தப் படங்களை அவர் தத்ரூபமாக எடுத்துள்ளார்.

இந்தக் குளத்திலுள்ள முதலைகளுள் சிலவற்றுக்கு இவரோடு நல்ல பரிச்சயமும் இருந்ததால் ஓரளவு இவரின் பணியும் இலகுவாக இருந்தது என்று அவர் கூறுகின்றார்.



எவ்வாறாயினும் தண்ணீருக்கு அடியில் நம்ப முடியாத மிகவும் ஆபத்தான உயிரினம் முதலைதான் என்பது குறிப்பிடத்தக்கதாகும்

0 comments:

Post a Comment