உலகின் மிகவும் பழமையான திருமண கேக்!

Tuesday 15 February 2011

இதுதான் உலகின் மிகவும் பழமையான பூரணப்படுத்தப்பட்ட திருமண கேக். இந்தக் கேக்கிற்கு 113 வருடங்களாகின்றன.
இதன் ஐசிங் பகுதிக்குள் சீனி கரைந்தோடி அதை பிரவுன் நிறமாக்கியுள்ளது.
 

இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது ஏற்பட்ட குண்டு வெடிப்புகள் காரணமாக வெடிப்புக்களும் இதில் ஏற்பட்டுள்ளன.

1898ல் விக்டோரியா மகாராணி அரியாசனத்தில் இருந்த போது இது பேக் பண்ணப்பட்டது. இருந்தாலும் அதில் இன்னமும் ஈரத்தன்மை காணப்படுவதாக சோதனைகள் மூலம் தெரியவந்துள்ளது. 

நான்கு அடுக்குகளைக் கொண்ட இந்த கேக் 1964 வரை ஒரு பேக்கரியில் காட்சிக்கு வைக்கப்ட்டிருந்தது. 

அந்த பேக்கரி மூடப்பட்டதும் தற்போது இந்தக் கேக் வைக்கப்பட்டுள்ள விலிஸ் நூதனசாலையில் ஒப்படைக்கப்பட்டது

1 comments:

வித்தியாசமான நல்ல தகவல் :)

Post a Comment