Tuesday 15 February 2011

செருப்புகளில் இந்து கடவுள்களின் உருவங்கள் பொறிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இதற்கு மலேசியாவில் உள்ள இந்து அமைப்புகள்
கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
மலேசியாவில் உள்ள சில கடைகளில் இந்து கடவுள்களின் உருவங்கள் பொறிக்கப்பட்ட செருப்புகள் விற்பனை செய்யப்படுகின்றன என அங்கு வெளியாகும் தமிழ் பத்திரிகை செய்தி ஒன்றை வெளியிட்டது. இதனால் அங்குள்ள இந்து அமைப்புகள் கடும் அதிருப்தியடைந்துள்ளன.
இதுகுறித்து மலேசிய இந்து சங்க தலைவர் மோகன் ஷான் கூறியதாவது: இந்து மதத்தை அவமதிக்கும் வகையில் இந்த செயல் அமைந்துள்ளது. இதுபோன்ற செருப்புகள் இறக்குமதி செய்வதற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என வர்த்தக அமைச்சகத்திடம் வலியுறுத்தியுள்ளோம் என்றார்.
மலேசியாவில் உள்ள மகா மாரியம்மன் கோவிலின் தலைவர் நடராஜா கூறுகையில், "இந்து கடவுள் உருவம் பொறிக்கப்பட்ட செருப்புகள், உடனடியாக கடைகளில் இருந்து வாபஸ் பெறப்பட வேண்டும். இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்

0 comments:

Post a Comment