இளம் வயதிலே கர்ப்பமடைவது பல பாரிய பிரச்சனைகளை

Wednesday 16 February 2011

எப்போது நாம் பூப்படைகிறோமோ அப்போதே நம் உடல் கொஞ்சம் கொஞ்சமாக உடலுறவுக்கும் குழந்தை பெறுதலுக்கும் தயாராகத் தொடங்குகிறது.
 

எத்தனை வயதில் ஒருவர் உறவில் ஈடுபட வேண்டும் என்பதில் கலாச்சார ரீதியாக பல கருத்துகள் இருந்தாலும், மருத்துவ ரீதியாக எப்போது ஒரு பெண்ணோ அல்லது ஆணோ உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் உறவில் ஈடுபடத் தயாரோ அப்போதே அவர்கள் உறவில் ஈடுபடலாம். 

ஆனால் முக்கியமாக கவனிக்கப் படவேண்டியது இளம் வயதிலே கர்ப்பமடைவது பல பாரிய பிரச்சனைகளை அந்தப் பெண்ணுக்கு ஏற்படுத்தலாம். அதிலும் குறிப்பாக 18 வயதிற்கு உட்பட்ட பெண்கள் கர்ப்பம் அடைவதை முற்றாக தவிர்க்க வேண்டும். 

ஆகவே திருமணம்யாகியிருந்தாலும் கூட .18 வயதிற்கு உட்பட்ட பெண்கள் உறவில் ஈடுபடும் போது உரிய பாதுகாப்பு முறைகளை கையாண்டு கர்ப்பமடைவதைத் தவிர்க்க வேண்டும்.

0 comments:

Post a Comment