எட்டாவது உலக அதிசயம்

Tuesday 15 February 2011


இந்தியாவின் தாஜ்மகால், சீனாவின் பெருஞ்சுவர் உள்ளிட்ட ஏழு உலக அதிசயங்கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன.
தற்போது எட்டாவது உலக அதிசயமாக நியூசிலாந்தில் உள்ள ரொடோ மாகானா ஏரிக்குள் மூழ்கி கிடக்கும் மொட்டை மாடி கட்டிடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவை 60 மீற்றர் ஆழத்தில்
இருப்பது தெரியவந்துள்ளது. இவை 19 ம் நூற்றாண்டை சேர்ந்தவை எனத் தெரிகிறது. எரிமலைகளின் சீற்றத்தால் கடந்த 125 ஆண்டுகளுக்கு முன்பு ஏரிக்குள் மூழ்கியிருக்கலாம் என கிவி மற்றும் அமெரிக்கா விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
தண்ணீருக்குள் மூழ்கி கிடக்கும் இந்த மொட்டை மாடிகள், இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் ராட்சத திருமண “கேக்” வடிவத்தில் உள்ளது. அது கடந்த 1886 ம் ஆண்டு ஏரிக்குள் மூழ்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த ஏரியானது நியூசிலாந்தின் ஜியோ தெர்மல் பகுதியில் உள்ள வடக்கு தீவில் அமைந்துள்ளது. இதை தண்ணீருக்குள் மூழ்கி பார்க்க அதி நவீன ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. இதன் மூலம் தங்கள் நாட்டின் சுற்றுலா வளர்ச்சி அதிகரிக்கும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment