அரசுக்கு எதிரான போராட்டம்: ஹிலாரி கிளிண்டன் ஆதரவு

Tuesday 15 February 2011

ஈரான் தலைநகர் டெகரானில் ஆயிரக்கணக்கான மக்கள் அரசுக்கு
எதிராக போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்திற்கு அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர்  ஹிலாரி கிளிண்டன் ஆதரவு
தெரிவித்துள்ளார். எகிப்தில் தங்களது உரிமைக்காக மக்கள் போராடி வெற்றி கண்டுள்ளனர். அதே போன்று ஈரானிலும் போராட்டம் வெடித்துள்ளது   என  ஹிலாரி  கிளிண்டன் தெரிவித்தார்.
தலைநகர் டெகரானில் போராட்டம் நடத்துவதற்கு அரசு தடை விதித்துள்ளது. இந்த தடையையும் மீறி போராட்டம் நடந்த மக்கள் திரண்டார்கள். இதனால் போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் பிடித்து சென்றனர். எதிர்கட்சி தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டார்கள். தலைநகரை தொடர்ந்து அரசுக்கு எதிராக ஈரானின் முக்கிய நகரங்களான இஸ்பகனன், மாஷ்ஹட், ஷிராஸ் நகரங்களிலும் மக்கள் போராட்டம் நடத்தினார்கள்.
கடந்த 2009-ம் ஆண்டில், ஈரான் அரசுக்கு எதிராக எதிர்கட்சிகள் நடத்திய போராட்டத்தில் 8 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment