தோற்றமோ 80 வயது பாட்டி போல! விசித்திர நோயால் அவதி

Thursday 17 February 2011

இந்தச் சிறுமிக்கு எட்டு வயதுதான் ஆகின்றது. ஆனால் தோற்றமோ 80 வயதுத் தோற்றம். விரைவாக வயதாகும் ஒரு வகை அரிய நோய் தான் இந்த நிலைமைக்குக் காரணம்.


Hutchinson-Gilford Progeria Syndrome (HGP) என்று இந்த நோய் அடையாளம் காணப்பட்டுள்ளது.

முதலாவது பிறந்த தினத்தைக் கொண்டாடுவதற்கு ஒரு சில வாரங்களுக்கு முன்பு தான் இவருக்கு இந்த நோய்த் தாக்கம் இருக்கின்றமை தெரியவந்தது.

ஆனால் அஷாந்தி என்ற இந்தச் சிறுமிக்கு மூளை வளர்ச்சியில் எந்தப் பிரச்சினையும் இல்லை.

அவருடைய வயதுக்கு ஏற்ற வகையில் அது காணப்படுகின்றது. தோற்றத்திலும், சருமத்திலும் தான் முதுமை. எடையும் போதாது. இவரின் தற்போதைய எடை 13 இறாத்தல்கள் மட்டுமே.

நண்பர்களோடு விளையாடுவதில் அஷாந்திக்கு ஆர்வம் உண்டு.

ஆனால் அது முடியாத காரியம். அவரின் எலும்புகளையும் மூட்டுக்களையும் இந்த நோய் மிக மோசமாகப் பாதித்துள்ளமையே இதற்குக் காரணம்.

இசையை ரசிக்கும் ஆர்வமும் இவரிடம் காணப்படுகின்றது.

இவருக்குத் தேவையான சக்கர நாற்காலியை வாங்குவதற்கு 6000 பவுண் அரசாங்க உதவி கோரப்பட்டபோது அது மறுக்கப்பட்டுள்ளது.

காரணம் இவர் ஒரு அங்கவீனரல்ல.

அந்த வகைப்படுத்தலின் கீழ் இவரைச் சேர்த்துக் கொள்ள முடியாது, என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் பிரிட்டனின் சன் பத்திரிகை நிறுவனம் இவருக்கு இந்த நாற்காலியை வழங்கி உதவியுள்ளது.

அஷாந்தியின் உடல் நிலை காரணமாக அவருக்கு அடிக்கடி சுவாசப் பிரச்சினையும் ஏற்படுகின்றது.

இதனால் இவரின் இரத்த ஓட்டமும் அவ்வப்போது பாதிக்கப்படுகின்றது. இந்த நோய்க்கான மருந்து பிரான்ஸில் இப்போதுதான் பரீட்சார்த்த நிலையில் உள்ளது.

வருடத்துக்கு இரண்டு தடவைகள் என்ற அடிப்படையில் அஷாந்திக்கு இந்த மருந்து இரண்டு தடவைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன் விளைவாக இவரின் இரத்தக் குழாய் பாதிப்படைவது தடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இது எவ்வளவு காலம் தாக்குப் பிடிக்கும் அல்லது எதிர்காலத்தில் குருதிச் சுற்றோட்டம் எந்தளவுக்கு சீராக இருக்கும் என்பது பற்றி எந்த உத்தரவாதத்தையும் வழங்க முடியாது என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

சசெக்ஸ் மேற்குப் பகுதியில் வசித்துவரும் இந்தச் சிறுமிக்கு ஒரு வயது முதலே தலை முடி உதிர ஆரம்பித்துவிட்டது. இந்தச் சிறுமியின் தாய்க்கு 25 வயதாகின்றது.

தன்னுடைய முழுக் கவனத்தையும் அவர் அஷாந்தி மீது செலுத்தி வருகின்றார்.

இந்த நோய் மரபணுவோடு சம்பந்தப்பட்டது என்றும், மிகவும் அரிய வகை நோய் என்றும் குணப்படுத்த முடியாதது என்றும் வைத்தியர்கள் கூறுகின்றனர்

0 comments:

Post a Comment