குற்றவாளிக்கு சீனாவில் மரண தண்டனை

Thursday 3 February 2011

இரு பெண்களை கடத்திச் சென்று பல நூற்றுக் கணக்கான நாட்கள் பாலியல் அடிமைகளாக வைத்து கொடுமைப்படுத்தினார் என்கிற வழக்கில் 40 வயது உடைய Zeng Qiangbao என்பவருக்கு சீனாவில் மரண தண்டனைத் தீர்ப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டு உள்ளது.



இவர் 16 வயதுச் சிறுமியான pedestrian Lili என்பவரை 2008 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 16 ஆம் திகதி இரவு 10.00 மணிக்கு கடத்திச் சென்று வீட்டில் உள்ள பாதாள அறையில் அடைத்து வைத்து இருக்கின்றார்.
590 நாட்கள் இவரை அடைத்து வைத்து உள்ளார்.

அதே போல் Honghong என்கிற 19 வயது யுவதியை 2009 ஆம் ஆண்டு ஜூலை 02 ஆம் திகதி கடத்திச் சென்று அதே பாதாள அறையில் அடைத்து வைத்து இருக்கின்றார்.

317 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு இருக்கின்றார்.

இரு பெண்களும் பல நூற்றுக் கணக்கான தடவைகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இவர்கள் பாதாள அறைக்குள் அடைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த விடயம் வெளிச்சத்துக்கு வந்த கதை மிகவும் சுவாரஷியமானது.

இவர்களில் ஒருவர் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்ற இடம், விபரங்கள், தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற வீட்டுப் பாதாள அறையின் மாதிரிப் படம் ஆகியவற்றை வரைந்து தொலைக்காட்சிப் பெட்டி ஒன்றுக்குள்ளே செருகி வெளியில் வீசி இருக்கின்றார்.

இதன் பின் ஒரு வருடம் கழித்து தொலைக்காட்சிப் பெட்டியை திருத்துனர் ஒருவர் பரிசோதித்தபோது அவரின் கைகளுக்கு இத்தாள் கிடைத்தது.

இவ்விடயம் உள்நாட்டு தொலைக் காட்சிகளில் ஒளிபரப்பாகியது.

பொலிஸார் உஷார் அடைந்தனர்.

வீட்டைக் கண்டு பிடித்து பாதாள அறையை முற்றுகை இட்டனர்.

மரணத்தின் விளிம்பில் தவித்துக் கொண்டிருந்த நிர்வாணப் பெண்கள் இருவரையும் கடந்த மே மாதம் மீட்டனர்.

Zeng Qiangbao இது வரை பதினொரு பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி இருக்கின்றார்.

2007 ஆம் ஆண்டுக்கும் 2010 ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் பெறுமதியான பல பொருட்களை பெண்களிடம் இருந்து அபகரித்து உள்ளார்.

0 comments:

Post a Comment