ஒலிம்பிக் போட்டிக்கான செலவு 9.298 பில்லியன் பவுண்கள்

Wednesday 16 February 2011

இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கான செலவு 9.298 பில்லியன் பவுண்கள் என பிரித்தானிய அரசும் ஒலிம்பிக் வெளியீட்டு அதிகாரசபையும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ஒலிம்பிக் போட்டிக்கான செலவு 7.301 பில்லியன் பவுண்கள் என ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

ஒலிம்பிக் அமைச்சர் ஹியுக் ரொபட்சன் கருத்து வெளியிடுகையில், தற்போது நடைபெற்றுக் கொண்டு இருக்கும் கட்டிட வேலைப்பாடுகள் குறித்த காலப்பகுதியில் செய்து முடிக்கப்படும் எனக் குறிப்பிட்டார். 

ஒலிம்பிக் போட்டிக்கான ஏற்பாடுகள் 79 வீதம் தற்போது நிறைவடைந்துள்ளதாகவும் இவ்வருட இறுதிக்குள் அனைத்து பணிகளும் நிறைவடைந்து விடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது

0 comments:

Post a Comment