மாத்தையாவின் மரணம் தொடர்பாக புதிய கதை!

Tuesday 25 January 2011

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிரதித் தலைவராக இருந்த மகேந்திர ராஜா அல்லது மாத்தையா படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக புதிய கதை ஒன்று வெளி வந்து உள்ளது.


ஜேர்மனியைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவரை மேற்கோள் காட்டி இச்செய்தி வெளியாகி உள்ளது.

பாஸ்கரன் யாழ்ப்பாணத்தில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர் என்றும் புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரனின் பால்ய நண்பர்களில் ஒருவர் என்றும் கூறப்படுகின்றது.

இவர் யாழ்ப்பாணத்தில் சஞ்சிகை ஒன்றில் வேலை பார்த்து உள்ளார். கொழும்பில் பத்திரிகை ஒன்றில் பணியாற்றி இருக்கின்றார்.

சிங்களவர் மீது புலிகள் இயக்கம் தாக்குதல் நடத்துவதை மாத்தையா கண்டித்தார் என்றும் இதனால் பிரபாகரன் ஆத்திரம் அடைந்தார் என்றும் இந்நிலையிலேயே இருவருக்கும் இடையில் கடும் முறுகல் ஏற்பட்டது என்றும் பாஸ்கரன் தெரிவித்து உள்ளார்.

முல்லைத் தீவு மாவட்டத்தில் உள்ள காட்டில் சிகப்பு மிளகாய் தோட்டம் என்று ஒரு இடத்தை புலிகள் வைத்து இருந்தனர் என்றும் இங்கு பிரபாகரனால் மாத்தையா நேரடியாக சுட்டுக் கொல்லப்பட்டார் என்றும் பாஸ்கரன் கூறி உள்ளார்.

மாத்தையா புலிகள் இயக்கத்தின் சேர்கின்றமைக்கு முன் பொலிஸ்காரராக அரச உத்தியோகம் பார்த்தவர். மகரகம பொலிஸ் நிலையத்தில் கடமை ஆற்றி இருக்கின்றார். இவர் சிங்கள பெண் ஒருவரை திருமணம் செய்து இருந்தார் என்று கூறப்படுகின்றது.

0 comments:

Post a Comment