இணையத்தளங்களில் உலாவரும் கனவு ஈழம்

Tuesday 25 January 2011

தற்போது உலகில் எண்ணிலடங்கா முகவரியற்ற இணையத்தளங்கள் சுதந்திரமாக இயங்கி வருகின்றன. இவற்றில் பல எங்கிருந்து எவரால் இயக்கப்படுகிறது என்று யாருக்கும் தெரியாமலே உள்ளது.
இதனால் இவர்கள் தாம் விரும்பும் அரசாங்கங்களுக்கும், கட்சிக ளுக்கும், தனிப்பட்டவர்களுக்கும் ஆதரவாகவும் விரும்பாதவர்களுக்கு எதிராகவும் பிரசா ரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தவகையில் இணையத்தளங்களில் பல, தமிழ் மொழியில் சுதந்திரமாக இயங்கி வருகின்றன. அவற்றிலும் பல மறைந்த விடுதலைப் புலிகளுக்குச் சார்பான செய்திகளை வெளியிடுவதற் காகவே இயங்கி வருகின்றன.
இந்தத் தமிழ் இணையத்தளங்கள் உள்நாட்டில் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும் வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. இந்த இணையங்களில் கனவு ஈழத்தை இவர்கள் கண்டு வரு கின்றனர்.
இதற்குக் காரணம் இந்தப் புலம்பெயர் சமூகம் இன்னமும் புலிகளின் மோகத்திலேயே வாழ்ந்து வருவதுதான்.
புலிகள் இருக்கிறார்கள் எனும் நப்பாசை இந்தப் பலரில் இன்னமும் இருந்து வருவது வேதனையானதும், வேடிக்கையானதுமான விடயம். புலிகள் அழிக்கப்படும்வரை உள்நாட்டில் அவர்கள் வளர முக்கிய காரணமாக இருந்தவர்கள் இந்தப் புலம்பெயர் சமூ கமே.
சுமார் முப்பது வருடங்கள் அல்லது இருபது வருடங்களுக்கு முன்னர் என்றால் ஏதோ அதில் ஓரளவு நியாயம் இருந்தது என்று மன்னிக்கலாம். ஆனால் இந்தப் பதினைந்து இருபது வருட காலத்தில் விடுதலைப் புலிகள் ஒரு தலைப்பட்சமாக ஏனைய இயக்கங்களை ஈவி ரக்கமின்றிக் கொன்று குவித்து போராட முனைந்தமை அபத்தமான ஒரு செயல். அது ஒரு அர்த்தமற்ற போராட்டம்.
அந்தச் சம்பவத்திற்கு பின்னர் அதனை விடுதலைப் போராட்டம் என்றோ அல்லது உரிமைப் போராட்டம் என்று அழைத்தாலோ அவமானம்.
தமது சுயலாபத்திற்கும், தனிமனித சுதந்திரத் திற்காகவும், இருப்பிற்காகவுமே நடத்தப்பட்ட போராட்டம். வெறுமனே மக்களுக்கான போராட்டம் எனக் கூறி பொய்யாக முன்னெடுக்கப்பட்டு பல இளைஞர்களின் உயிரைக் குடிக்க வைத்த போராட்டம், எண்ணிலடங்கா அப்பாவிப் பொதுமக்களின் உயிர்கள், கணக் கிடப்படமுடியாத சொத்துக்களை நாசமாக்கிய போராட்டம்.
இதற்காகவா புலம்பெயர் சமூகம் தாம் அங்கு குளிரிலும், பனியிலும் வெள்ளைக்காரனிடம் பேச்சு வாங்கி கஷ்டப்பட்டு உழைக்கும் பணத்தை இங்கு கள்ளமாக அனுப்பி வந்தார்கள். ஆனால் இங்கோ எவ்விதமான திட்டமும் இன்றி தமது உல்லாசத்திற்காக அவை செலவு செய்யப்பட்டன.
இன்றும் அதனை விளங்கிக் கொள்ளாத புலம்பெயர் சமூகம் புலி புலி என்றும், நாடு கடந்த தமிbழம் என்றும் ஏமாறுவது அவர்களது முட்டாள்தனம்.
உண்மையில் மக்கள் மீது புலிகளுக்கு அக்கறை இருந்திருந்தால் ஒரு சந்தர்ப்பத்திலாவது ஏதோ ஒரு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையை நடத்தி ஒரு தீர்வினைப் பெற்றிருக்கலாம். ஜே. ஆர். ஜேயவர்தன, ஆர். பிரேமதாச, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ரணில் விக்கிர மசிக, மஹிந்த ராஜபக்ஷ என அனைவர் வைத்த தீர்வுப் பொதிகளையும் புறந்தள்ளி தாமே அந்த வன்னிக் காட்டிற்கு ராஜாக்களாக இருக்க வேண்டும் என நினைத்தார்கள்.
தம்மிடம் ஏதோ யானைப்படை, குதிரைப்படை இருப்பது போல விமானப்படை, கடற்படை, தரைப்படை இருப்பதாக வெளியுலகிற்கு ஊடகங்கள் மூலமாகப் பாசாங்கு காட்டி மூன்று தசாப்தங்களாக சிங்கள அரசாங்கங்களையும், தமிழ் மக்களையும் ஏமாற்றி வந்துள்ளனர். ஆனால் அவர்களது ஊடகப் பாசாங்கு அனைத்தும் உடைந்த பப்படம் போலாகிவிட்டது.
நாட்டின் முன்னைய தலைவர்களைப் புலிகள் ஏமாற்றியமையை நன்கு அறிந்திருந்தும் ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷ புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தார்.
பல சந்தர்ப் பங்களில் விட்டுக் கொடுப்புடனும் நடந்து கொண்டார். ஆனால் புலிகள் தலைக்கு மேலேறி மக்களைச் சீண்டிய போதுதான் வேறுவழியின்றி அவரது தலைமையிலான அரசாங்கம் புலி களை இலக்கு வைத்தது. அதனை யாரும் தவறு என்று கூறமுடியாது. அது புலிகள் தெரி ந்து கொண்டு விட்ட தவறே.
புலிகளை அழித்தது தொடர்பில் அன்று ஒருசிலர் கவலை கொண்டிருந்தாலும் இன்று அவர்கள் ஏ-9 வீதி ஊடாகப் பயணிக்கும்போது அந்தக் கவலையை மறந்து விடுகிறார்கள்.
சொந்த மக்களிடம் பாவித்த பொருட்களை எடுத்துச் சென்றாலும் வரி வசூலித்து அதில் சொகுசு வாகனம் ஓடிய புலிகள் இன்றில்லாதபடியால் நிம்மதியாக இரவில் கூட பயணிக்க முடிகிறது.
அதுமட்டுமா பாழடைந்திருந்த கிளிநொச்சியும், முல்லைத்தீவும் அபிவிருத்தி கண்டு வருகிறது. புலிகள் இருந்திருந்தால் சண்டை, சண்டை என்று நமது அடுத்துவரும் சந்ததியினரும் பய மானதொரு இருண்ட வாழ்வைத்தான் கண்டிருக்க வேண்டும்.
எனவே இன்று இணையத் தளங்களில் கனவு ஈழத்தைக் கண்டுவரும் புலம்பெயர் சமூகம் இந்த யதார்த்தமான உண்மையை விளங்கிக் கொள்ள வேண்டும்.

editor.tkn@lakehouse.lk

0 comments:

Post a Comment