பாகிஸ்தானில் இருந்து 5000 எருமைகள், 10 ஒட்டகங்கள் இறக்குமதி

Tuesday 25 January 2011

பாகிஸ்தானில் இருந்து 5000 எருமைகள், 10 ஒட்டகங்கள் ஆகியவற்றை எதிர்வரும் மூன்று வருடங்களுக்கு இடையில் இறக்குமதி செய்ய உள்ளது இலங்கை.

இதன் முதல் கட்டமாக எதிர்வரும் மார்ச் மாதம் 500 எருமைகள் இறக்குமதி செய்யப்பட உள்ளன. இவை அரச பண்ணைகளுக்கு விநியோகிக்கப்படும்.

இத்தகவலை கால் நடை வளர்ப்பு அமைச்சுச் செயலாளர் எச்.ஏ. கமகே வழங்கினார்.

பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையில் வர்த்தக உடன்படிக்கை ஒன்று அண்மையில் கைச்சாதிடப்பட்டது. பாக்.ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டபோது இவ்வொப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இவ்வொப்பந்தத்தின் கீழ்தான் எருமைகளும், ஒட்டகங்களும் இறக்குமதி செய்யப்பட உள்ளன.

தேவையான பாலின் அளவில் 20-25 வீதமே இலங்கையில் தற்போது உற்பத்தி செய்யப்படுகின்றது. இதை 40-50 வீதம் வரை உயர்த்த அரசு முயற்சிக்கின்றது.

பாகிஸ்தானில் இருந்து கொள்வனவு செய்யப்பட இருக்கும் ஒரு ஒட்டகத்தின் விலை 300,000 ரூபாய். ஆனால் இறக்குமதிக்கு ஏற்படுகின்ற செலவையும் சேர்த்தால் ஒரு ஒட்டகத்துக்காக அரசு 400,000 ரூபாய் வரை செலவு செய்ய வேண்டி இருக்கும்.

0 comments:

Post a Comment